தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா
தூத்துக்குடி தெற்கு புதுத்தெரு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி,ஜே.சி.ஐ.பியர்ல்ஸ் சிட்டி தலைவர் பொன்ராஜ்,முதல் பெண்மணி ரத்னா,செயலாளர் செல்ல நரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரின்ஸ் தலைமை தாங்கினார்.ஜேசிஜ சார்பில் இக்கல்வியாண்டில் திறமைகளை வெளிப்படுத்தி பள்ளிக்கு பெருமை சேர்த்த குழந்தைகள் ஸ்ரீராம், ரூமானா, ஆதித்யா, கோகுல், முத்து ஸ்ரீ லயா ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் குழந்தைகள் அனைவருக்கும் கேக் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் பிரின்ஸ் தலைமையில் ஆசிரியர்கள் ரத்னா, ஜான்சி, ஜாய்ஸ், பவானி பத்மா, ஜான்சிராணி, உஷா சாந்தினி ஆகியோர் செய்து இருந்தனர்.












