தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தலைமை ஆசிரியர்கள் வாழ்த்து

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தலைமை ஆசிரியர்கள் வாழ்த்து

தூத்துக்குடிக்கு புதிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நேற்று பொறுப்பேற்ற சங்கீதா சின்ன ராணி – யை தூத்துக்குடி மாவட்ட மேல்நிலைப்பள்ளிகளான சி. வ. அரசு மேல்நிலைப்பள்ளி, வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி எம். தங்கம்மாள்புரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட பல தலைமை ஆசிரியர்கள் சந்தித்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்ட உதவி திட்ட அலுவலர் முனியசாமி தனது சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இருந்த கணேஷ் மூர்த்தி பதவி உயர்வு பெற்று சென்ற காலி இடத்திற்கு 2 மாதங்களுக்குப் பிறகு தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக தற்போது சங்கீதா சின்ன ராணி பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.