தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் வணிகவியல் சார்பாக இணைய சந்தைப்படுத்துதல் ( Digital Marketing ) பயிற்சி

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் வணிகவியல் சார்பாக இணைய சந்தைப்படுத்துதல் ( Digital Marketing ) பயிற்சி

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வணிகவியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட இணைய சந்தைப்படுத்துதல் (டிஜிட்டல் மார்க்கெட்டிங்) குறித்த ஐந்து நாள் அனுபவப் பயிற்சி நிகழ்ச்சி இன்று வியாழக்கிழமை (23.10.2025) நிறைவடைந்தது.

கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கூகுள் விளம்பரங்கள், மெட்டா போன்ற சமீபத்திய நுட்பங்கள் குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

மொத்தம் 33 மாணவர்கள் கலந்து கொண்டு இப்பயிற்சியால் பயனடைந்தனர்.