தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

தூத்துக்குடி தஸ்நேவிஸ் மாதா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புகை இல்லா தீபாவளி திருநாளை தலைமை ஆசிரியை அருட் சகோதரி ஜெயந்திஜ குத்துவிளக்கு ஏற்ற சக ஆசிரியர்கள் சங்கீதா, எழில் சுஜிதா , கார்த்திபா,செல்வி நாகலட்சுமி மற்றும் ஆசிரிய பயிற்சி மாணவி அஸ்வினி ஆகியோரும் இவ்விழாவினை ஒளி ஏற்றி சிறப்பித்தார்கள்.

பத்தாம் வகுப்பு மாணவி டௌசிகா சொற்பொழிவு ஆற்றினாள். பள்ளி இசைக்குயில் மாணவிகள் பாடல் பாடினர்.

பின்னர் ஒளி வழிபாடு நடந்தது. புகை இல்லா சுற்றுச்சூழலை பாதுகாப்பதை பற்றி பத்தாம் வகுப்பு மாணவிகள் அட்லின் ஜெபிக்ஷா, கவி பிரியா, செல்வ ஜினிஷா,பிதர்சனா, மரிய ஸ்வீட்டி வில்லுப்பாட்டு பாடினார்கள். மேலும் புகையில்லா தீப திருநாளை மாணவிகள் அனைவருமே பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று தலைமை ஆசிரியர் கூறினார்.