போர்ட்சிட்டி சர்வதேச தரவரிசை செஸ் போட்டி : தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர் பட்டம் வென்றார்.

போர்ட்சிட்டி சர்வதேச தரவரிசை செஸ் போட்டி :
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர் பட்டம் வென்றார்.

தூத்துக்குடி வ. உ. சி துறைமுகத்தில் அகில இந்திய செஸ் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் அங்கீகாரத்துடன், தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம், வ. உ. சி துறைமுகம் ஆதரவுடன் இணைந்து நடத்திய போர்ட்சிட்டி சர்வதேச தரவரிசை செஸ் போட்டி அக்டோபர் 1 தேதி முதல் 5ம் தேதி வரை (5நாட்கள்) நடைபெற்றது.

உலக சதுரங்க கூட்டமைப்பின்(fide ) சர்வதேச தரவரிசை பெரும் இப்போட்டியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 210 செஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு பெற்று விளையாடினர்.

9 சுற்றுக்களாக நடைபெற்ற இப்போட்டியை வ.உ.சி துறைமுக துணை தலைவர் ராஜேஷ் செளந்தரராஜன் (IAS) கலந்து கொண்டு துவக்க விழா உரையுடன் முதல் சுற்று போட்டிகளை துவங்கி வைத்தார்.

துவக்க விழாவில் வ.உ.சி துறைமுக செயலர் மோகன் குமார் மற்றும் துறைமுக துறை தலைவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

முன்னதாக இப்போட்டிக்கு வந்திருந்த அனைவரையும் தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழக செயலாளர் டாக்டர். கற்பகவல்லி வரவேற்றார்.

துணைத் தலைவர்கள் டைபின், கதிரவன், நந்தகுமார் மற்றும் செந்தில் கண்ணன் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கினார் டாக்டர் வசீகரன் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார்.

2ம் சுற்று போட்டிகளை வி.வி.டி சன்ஸ் இயக்குனர் கோடீஸ்வரன் மற்றும் சர்வதேச கைப்பந்து வீரரும், TNEB விளையாட்டு அலுவலருமான மங்கள ஜெயபால் துவக்கி வைத்தனர்.

3ம் சுற்று போட்டிகளை வெற்றிவேல் அன் கோ வின் நிர்வாக இயக்குனர் பிரேம் வெற்றி துவக்கி வைத்து பேசினார்.

4ம் சுற்று போட்டிகளை,All India chamber of commerce ன் தலைவர் சங்கர் மாரிமுத்து, Pearl city engineering Builders ன் நிர்வாக இயக்குனரும், மற்றும் TN volleyball Association ன், செயலாருமான ரமேஷ் குமார் துவக்கி வைத்து பேசினர்.

5ம் சுற்று போட்டிகளை வ. உ. சி துறைமுகத்தின் CME, கணேசன் மற்றும் சர்வதேச நடுவர் ஆனந்த ராம் ஆகியோருடன் இணைந்து முன்னாள் AICC தலைவர் தமிழரசு துவக்கி வைத்தனர்.

6ம் சுற்று போட்டிகளை வ.உ. சி துறைமுகத்தின் Deputy conserator கேப்டன் கிங்ஸ்டன் நீலத்துரை, ஜிம்கானா தலைவர் பிண்டோ வில்லவராயர் துவக்கி வைத்தனர்.

7ம் சுற்று போட்டிகளை ஆசீர் ஆட்டோமொபைல் MD ம், மாருதி சுசுகி டீலருமான ராஜகுமார் ஆசிர்வாதம் , வ. உ. சி துறைமுகத்தின் Civil engineer பாலாஜி துவக்கி வைத்தனர்.

8 ம் சுற்று போட்டிகளை வ.உ.சி துறைமுகத்தின் டெபுடி கமாண்டன்ட் பிரின்ஸ் குமார், காமராஜ் கல்லூரி செயலர் சோமு, முதல்வர் பானுமதி, கௌரவ உறுப்பினர் மோகன்ராஜ் ஆகியோர் தலைமையில் துவக்கி வைத்தனர்.

9 ம் சுற்று போட்டிகளை கே.வி.எஸ். பள்ளியின் தலைவரும் தமிழ்நாடு கூடைப்பந்து அசோசியேஷன் பொருளாளருமான டாக்டர். பாலமுருகன், தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழக தலைவர் பிரகாஷ் தலைமையில் துவக்கி வைத்தார்.

ஒன்பது சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டி ஐந்தாம் தேதி மதியம் 2:00 மணிக்கு நிறைவு பெற்றது. அன்று இரண்டரை மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

பரிசளிப்பு விழாவிற்கு வ உ சி துறைமுகத்தின் செயலர் மோகன்குமார் தலைமை வகித்தார். மாவட்ட சதுரங்க கழக தலைவர் ஜோ பிரகாஷ் , துணைத் தலைவர் ரைபின் தார்ஷியஸ் முன்னிலையில் சர்வதேச நடுவர் விஜய ராகவன் போட்டி அறிக்கையை வாசித்தார்.

சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஐபிஎஸ், கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களை வாழ்த்தி பேசி பரிசுகளை வழங்கினார்.

வெற்றி பெற்றவர்களுக்கு ₹6,00,000 ரொக்க பரிசு தொகையாகவும் 70 பரிசு கோப்பைகளாகவும் சான்றிதழ்களுடன் வழங்கப்பட்டது.

முதல் பரிசு ரூபாய் 75000 ரொக்க பரிசினை தூத்துக்குடி காமராஜ் கல்லூரியை சேர்ந்த மாணவர் செல்வமுருகன் வென்றார்.

இரண்டாம் பரிசு ரூபாய் 50000 சென்னையை சேர்ந்த ஷாம் பெற்றார்.

3ம் பரிசாக ரூபாய் 30000 சென்னை சேர்ந்த fide Master பிரசன்னநா பெற்றார்

போட்டிக்கான அணைந்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் வ. வு. சி துறைமுகதினரும் இணைந்து செய்திருந்தனர்.