கடையநல்லூர் அரசு கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம்
கடையநல்லூர் அரசு கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அணி 007 சார்பாக காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 3.10.25 இன்று காந்திய கொள்கைகள் மற்றும் சேவைகள் என்ற தலைப்பில் சேவை மனப்பான்மையை வளர்ப்பது குறித்து கருத்துரை வழங்கப்பட்டது.

கல்லூரி முதல்வர் ஜெயா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வணிக நிர்வாகவியல் துறை தலைவர் முனைவர். பூங்கொடி முன்னிலை வகித்தார் பேராசிரியர். முனைவர். சண்முக வடிவு காந்திய கொள்கை மற்றும் சேவைகள் குறித்து கருத்துரை வழங்கினார்.
நிகழ்வில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர். பால் மகேஷ் ஏற்பாடு செய்திருந்தார்.













