தேர்தலால் செமஸ்டர் தேர்வில் மாற்றமா? உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் விளக்கம் :

தேர்தலால் செமஸ்டர் தேர்வில் மாற்றமா?
உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் விளக்கம் :

செமஸ்டர் தேர்வுகள் குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் விளக்கம்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாகவே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் விளக்கம் அளித்துள்ளார்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் இன்று புதிய தாழ்வுத்தள பேருந்து சேவையை தொடங்கி வைத்த உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன்,
செமஸ்டர் தேர்வுகள் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்து பேசியதாவது:

செமஸ்டர் தேர்வுகள் உள்பட அனைத்து தேர்வுகளும் பல்கலைக்கழகங்களால் கல்லுரிகள் தொடங்குவதற்கு முன்பு வரையறுக்கப்பட்டுள்ளது.

இதனை தேர்தல் ஆணையம் நன்றாக அறியும். விடுப்பு காலங்களில்தான் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும். தேர்தலுக்காக முன்கூட்டியே தேர்வு என்பது இல்லை என தெரிவித்தார்.