- புதியதாக பணி நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 20 ம் தேதி வாழ்த்துரை
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பிறப்பித்த உத்தரவு வருமாறு
2023 – 2024 ஆம் ஆண்டிற்க்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம் மூலம் அரசு /நகராட்சி உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு 08 – 09 – 2025 முதல் தெரிவு செய்யப்பட்ட பள்ளியில் பணியில் சேர்ந்து பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகின்ற 20 – 9 – 2025 சனிக்கிழமை அன்று தமிழக முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் வாழ்த்துரை வழங்க உள்ளார்.

மேற்படி தமிழக முதலமைச்சர் வாழ்த்துரை வழங்கும் நிகழ்ச்சி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் 20- 9- 2005 சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு நடைபெற இருக்கிறது.
இந்த வாழ்த்துரை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தங்கள் மாவட்டத்தில் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகவல் அளித்து ஒரு பொறுப்பு நபரை நியமித்து அந்த நபருடன் அந்த ஆசிரியர்களை மேற்படி விழா நடைபெறும் இடத்திற்கு 20 – 09 – 2025 சனிக்கிழமை காலை 7.00 மணிக்குள் பதிவு செய்திடும் வகையில் அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் புதிதாக நியமன செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியருடன் கூடுதலாக ஒரு நபரை அழைத்து வர அனுமதிக்கலாம்.
மேலும் இவ்விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், இந்து அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்க உள்ளார்கள்.
எனவே மேற்கோள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் புதிதாக நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வாழ்த்துரை வழங்கும் நிகழ்ச்சியில் தவறாமல் பங்கேற்கும் வகையில் கலந்து கொள்ள அறிவுறுத்திடுமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இயக்குநர் தகவல்
இங்கே பதிவிறக்கம் செய்யவும்
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇












