கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக சகோதரத்துவ தினம்

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக சகோதரத்துவ தினம்

கோவில்பட்டி, உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளம் செஞ்சிலுவைச் சங்கம் (YRC) மற்றும் விவேகானந்த கேந்திரம் இணைந்து உலக சகோதரத்துவ தின விழா அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர். அண்ணாமலைசாமி ஊக்கமளிக்கும் வகையில் வாழ்த்துரை வழங்கினார்.

விவேகானந்த கேந்திரத்தின் பிரதிநிதி பரமகுரு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, விவேகானந்தரின் சிந்தனைகள், சகோதரத்துவத்தின் மகத்துவம் மற்றும் இளைஞர்கள் சமூகத்தில் வகிக்க வேண்டிய பங்கு குறித்து உரையாற்றினார். அவரது ஊக்கமளிக்கும் சொற்பொழிவு மாணவர்களுக்குள் புதிய சிந்தனையையும் சமூகப் பொறுப்புணர்வையும் விதைத்தது.

பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இளம் செஞ்சிலுவைச் சங்க தன்னார்வத் தொண்டர்கள் விழாவில் பங்கேற்றனர்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் பாரதி, இளம் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் முத்து ராஜா மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.