TET தேர்வு – தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் : RTE – 2009 சட்டம் என்ன சொல்கிறது – தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை விளக்கம்

TET தேர்வு – தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் :
RTE – 2009 சட்டம் என்ன சொல்கிறது – தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை விளக்கம்

RTE சட்டம் 2009 பிரிவு -3 புதிய ஆசிரியர் நியமனங்களுக்கு குறைந்தபட்ச தகுதியை நிர்ணயிக்கிறது அதே நேரம் ஏற்கனவே உள்ள ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க முடியாது என்றும் தெளிவுபடுத்துகிறது.

2010 – ஆண்டு வெளியிடப்பட்டது தேசிய ஆசிரியர் கல்வி மன்றத்தின் ( NCTE அறிவிப்பிலும் , குறிப்பிட்ட தேதிக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்வு பொருந்தாது எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

TET தேர்வைப் பின்னோக்கிப் பயன்படுத்துவது ஆசிரியர்களின் உரிமைகளைப் பறித்து தேவையற்ற சிக்கலையும் கற்பித்தலில் நிலையற்றதன்மையையும் உருவாக்குகிறது.