இந்திய திருநாட்டின் 15 வது குடியரசு துணைத்தலைவராக தமிழ் நாட்டின் சி. பி. ராதாகிருஷ்ணன் தேர்வு : தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி முன்னாள் மாணவர்

இந்திய திருநாட்டின் 15 வது குடியரசு துணைத்தலைவராக தமிழ் நாட்டின் சி. பி. ராதாகிருஷ்ணன் தேர்வு :
தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி முன்னாள் மாணவர்

சந்திரபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் ( மே 4, 1957 ல் தமிழ்நாட்டின் திருப்பூரில் பிறந்தார்.சி.பி. ராதாகிருஷ்ணன் என்று அழைக்கப்படுபவர், இந்தியாவின் தற்போதைய துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி. பி. ராதாகிருஷ்ணன் ஜூலை 2024 முதல் செப்டம்பர் 2025 தற்போது வரை மகாராஷ்டிராவின் ஆளுநராகவும், பிப்ரவரி 2023 முதல் ஜூலை 2024 வரை ஜார்க்கண்ட் ஆளுநராகவும் பணியாற்றினார் .

தனது இளமைப் பருவத்திலிருந்தே பாரதிய ஜனதா கட்சி (பாஜக) மற்றும் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) உறுப்பினராக இருந்த இவர், 1998 இல் கோயம்புத்தூரிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் 1999 பொதுத் தேர்தல்களில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் . 2003 முதல் 2006 வரை தமிழ்நாட்டில் பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்துள்ளார்.

சி.பி.ராதாகிருஷ்ணன் செப்.,12-ந் தேதி துணை ஜனாதிபதியாக பதவி ஏற்பு

டில்லி பாராளுமன்ற மைய மண்டபத்தில்12 ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு நிகழ்ச்சியில்
துணை ஜனாதிபதிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணமும், அரசியல் காப்பு உறுதிமொழியும் செய்து வைப்பார்.

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி பெருமிதம் :

தூத்துக்குடி வ. உ.சிதம்பரம் கல்லூரி முதல்வர் டாக்டர் வீரபாகு துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் குறித்து அளித்த பேட்டி

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியின் முன்னாள் மாணவர்.

மே 4, 1957 அன்று தமிழ்நாட்டின் திருப்பூரில் திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்தார். கல்லூரி படிப்பை தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் 1975 ஆம் ஆண்டு இளநிலை வணிக நிர்வாகவியல் ( BBA., ) பட்டப்படிப்பில் சேர்ந்து 1978 இல் நிறைவு செய்தார்.

1998 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் இருந்து முதன்முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயலாற்றி இன்றைய தினம் இந்திய திருநாட்டின் குடியரசு துணைத் தலைவர் எனும் உயரிய பொறுப்பை ஏற்று இருப்பது மிகவும் தனிச்சிறப்பான ஒன்று.

நமது தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி தனது பவள விழாவை கொண்டாடும் இந்த இனிய தருணத்தில் நம்முடைய கல்லூரி மேனாள் மாணவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்கள் நமது இந்திய திருநாட்டின் குடியரசு துணைத் தலைவர் பதவியை ஏற்று இருப்பது வ. உ. சிதம்பரம் கல்லூரி வரலாற்றில் ஒரு பொன் நாள் ஆகும். இந்த

தருணத்தில் நமது வ. உ. சிதம்பரம் கல்லூரியின் சார்பாக திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.