100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு செப். 7-ல் திருச்சியில் பாராட்டு விழா : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு செப். 7-ல் திருச்சியில் பாராட்டு விழா:
பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் 12, 10-ம் தேதி வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தமிழ்ப் பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா திருச்சியில் செப். 7-ல் நடைபெற உள்ளது.

திருச்சி காட்டூரில் உள்ள மான்போர்ட் பள்ளியில் செப். 7-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள விழாவுக்கு தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள், உரிய அடையாளச் சான்றுடன் வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு சுற்றரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.