தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் பழமையான பொருட்கள் மற்றும் தொல்பொருள் கண்காட்சி






தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி, சென்னை தமிழ் கூறும் நன்மக்கள் – தொல்லியல் குழு, தொல்லியல் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து 25 .08.2025மற்றும் 26.08.2025 ஆகிய இரண்டு நாட்கள் “பழமையான பொருட்கள் மற்றும் தொல்பொருள் கண்காட்சி” நடைபெற்றன.
இந்தக் கண்காட்சியின் நோக்கம் மாணவர்கள் மத்தியில் தொன்மையான பாரம்பரியம், தொல்லியல் கண்டுபிடிப்புகள், பாரம்பரியக் கலைப்பொருட்கள் இவற்றைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
கண்காட்சியை ஆங்கிலத் துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர். மோனிக்கா ராம்ராஜ் திறந்து வைத்தார். கல்லூரித் தாளாளர் ஏ.பி.சி.வீ.சொக்கலிங்கம்,அவர்கள் கல்லூரிச் செயலர் சுப்புலட்சுமி அவர்கள் மற்றும் முதல்வர் முனைவர். சுப்புலட்சுமி விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் தொன்மையான பொருட்கள், தொல்லியல் சான்றுகள், கல்வெட்டுகள், சிற்பங்கள் மற்றும் புகைப்படங்கள் எனப் பல அரிய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டின் பண்பாட்டு மரபுச் சிறப்பை எடுத்துக்காட்டுவதாக அமைந்தன.
கல்லூரி மாணவியரும், பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவியரும் உற்சாகமாக கலந்து கொண்டு அரிய காட்சிகளை தெரிந்து கொண்டனர். பண்பாட்டு பாதுகாப்பிற்கும் வரலாற்றுத் தொடர்ச்சிக்கும் ஊக்கமாக அமைந்தது.
தமிழ் கூறும் நன்மக்கள் தொல்லியல் குழு நிறுவனர் தீபக்
இந்த கண்காட்சியில் விளக்க உரையாற்றினார். வாணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர். சாமுண்டீஸ்வரி, வரலாற்றுத் துறைத் தலைவர் மற்றும் உதவிப்பேராசிரியர் முனைவர்.சங்கீதா, தமிழ் த்துறை உதவி ப்பேராசிரியர் முனைவர். புஷ்பகவல்லி, வாணிகவியல்துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.செல்லம்மாள், வரலாற்று த்துறை உதவி ப்பேராசிரியர் முனைவர். கற்பகம். ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.மிஸ்டிகா, தமிழ் துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.முருகலட்சுமி ஆகியோரும்,பிற போராசிரியர்களும் உறுதுணையாக இருந்து திட்டமிட்டு
வெற்றி கரமாக நடத்தினர்.
இக் கண்காட்சி, தொன்மையான பொக்கிஷங்களைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு மற்றும் எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டிய நிகழ்வாக அமைந்தது.












