10 ம் வகுப்பு மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் வெளியீடு!
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இணையதளம் மூலமாக தங்கள் முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம்.
முன்னதாக இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் சசிகலா வெளியிட்டு இருந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
கடந்த ஜூலை மாதம் நடந்த 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வை எழுதி மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையளத்தில் 26 ஆம் தேதி (இன்று) பிற்பகல் வெளியிடப்பட்டது..

பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை. மறுகூட்டல் அல்லது மறுப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் இன்று பிற்பகல் முதல் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.
இந்த நிலையில் 40 மாணவர்களுக்கு மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதே இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்வதற்கான இணைய இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அந்த இணைப்பை கிளிக் செய்து தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதிக் கொண்டு உள்நுழைந்து, தற்காலிக மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.












