அமெட் பல்கலைக்கழகத்தின் தேசிய மாநாடு: தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி முதல்வர் பங்கேற்பு

அமெட் பல்கலைக்கழகத்தின் தேசிய மாநாடு:
தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி முதல்வர் பங்கேற்பு

கடந்த 21.8.2025, வியாழக்கிழமை சென்னை அமெட்(AMET) தன்னாட்சி பல்கலைக்கழகம் நடத்திய “எதிர்கால கப்பல் போக்குவரத்திற்கான தொழில்முனைவு மற்றும் நிலைத்தன்மை” (NCESFS 2025) என்னும் தேசிய மாநாட்டில், வ.உ.சிதம்பரம்பிள்ளை153ஆம் பிறந்தநாள் நினைவாக நடைபெற்ற நிகழ்வில், முக்கிய விருந்தினராக தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் முதல்வர் முனைவர்.வீரபாகு பங்கேற்று, சிறப்புரையாற்றினார் .

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அமெட் பல்கலைக்கழகம், வ.உ.சிதம்பரம் கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொள்ளத் தங்களது தயார்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இந்த கூட்டாண்மை, கப்பற்துறை பயிற்சி முயற்சிகள், கல்வி பரிமாற்றம், ஆய்வு ஒத்துழைப்புகள், மாணவர்/ஆசிரியர் மேம்பாட்டு திட்டங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தும்.
குறிப்பாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கப்பல் மற்றும் கடல்சார் துறையில் புதிய வாய்ப்புகளைத் திறந்து வைக்கிறது.