அழகப்பா, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு

அழகப்பா, மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு

இரண்டு பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி மற்றும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சந்திரசேகர் ஆகியோரின் பதவிக்காலம் நேற்றுடன் ( 21 – 08 – 2025 ) முடிவடைந்தது.

இந்த நிலையில் இருவரின் பதவி காலத்தையும் ஆகஸ்ட் 22 ஆம் ( இன்று ) தேதியில் இருந்து மேலும் ஓராண்டு காலம் நீட்டித்து கவர்னர் ஆர். என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

இரு துணைவேந்தர்களும் சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர். என்.ரவியை சந்தித்து பதவி நீட்டிப்புக்கான ஆணையை பெற்றுக்கொள்ள உள்ளனர்.