தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் பூச்சிக்கொல்லிகளை கையாளுதல் பற்றிய அறிவியல் மன்றம் நடைபெற்றது

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் பூச்சிக்கொல்லிகளை கையாளுதல் பற்றிய அறிவியல் மன்றம் நடைபெற்றது

வ.உ.சிதம்பரம் கல்லூரி, விலங்கியல் துறை சார்பாக இன்று (18.8.2025) “பூச்சிக்கொல்லிகளை பாதுகாப்பாக கையாளுதல் மற்றும் அவற்றின் ஆரோக்கியம் மற்றும் சூழலியல் மீதான தாக்கங்கள்” என்ற தலைப்பில் விலங்கியல் அறிவியல் மன்றத்தை தொடங்கியது.

முதல்வர் முனைவர். வீரபாகு தலைமை தாங்கினார்.
முத்து குமார், (தாவர பாதுகாப்பு நிபுணர்) சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பூச்சிக்கொல்லி கையாளுதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அறிவியல் அணுகுமுறைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
விலங்கியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர். பேச்சிமுத்து வரவேற்புரை நிகழ்த்தினார்.

விலங்கியல் துறைத்தலைவர் முனைவர். ராதிகா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்று பயனுள்ள கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.