தூத்துக்குடியில் கலையின் குரல் அமைப்பில் சார்பில் கலை அறிவோம் நிகழ்ச்சி நடைபெற்றது
தூத்துக்குடியில் கலையின் குரல் அமைப்பின் சார்பில் இன்று கரகாட்டம் பயிற்சி. மில்லர்புரம் புரூஸ் லீ தற் காப்பு கலை பயிற்சி பள்ளியில் நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கமாக திரு பட இயக்குனர் அருந்ததி அரசு வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து கலை அறிமுகம் கரகத்தின் வரலாறு அடிப்படை அளவுகள் போன்ற பயிற்சிகளை பயிற்சியாளர் கலை வளர்மணி அருண்குமார் ( நிறுவனர் ஏகலைவன் கிராமிய கலை பயிற்சி கூடம் ) வழங்கினார்.

தொடர்ந்து குமிழ் முனை வாசிப்பு வண்டி மற்றும் குமிழ் முனை பதிப்பக நிறுவனறுமான சைமன் பயிற்சியாளருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினார். பத்மநாதன் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.
மாணவ மாணவிகள் இந்த பயிற்சியில் பலர் கலந்து கொண்டனர் மற்றும் நிகழ்வில் அன்பு , மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிறைவாக கலையின் குரல் நிறுவனர் கலை வளர்மணி சக்திவேல் நன்றியுரை ஆற்றினார்












