தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் 79 வது சுதந்திர தின விழா:

தூத்துக்குடி தூய மரியன்னை மகளிர் கல்லூரியில் 79 வது சுதந்திர தின விழா:

தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 79 வது சுதந்திர தின விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் ஜெஸி பெர்னாண்டோ, தலைமை தாங்கினார். புனித தாமஸ் அப்போஸ்தல் மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வர்.பிரான்சிஸ் கொடி ஏற்றி, மாணவர்களுக்கு சுதந்திர உணர்வைத் தூண்டி, நாட்டுப்பற்றினை விதைத்து சிறப்புரையாற்றினார்.

அதனைத்தொடர்ந்து மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முதலாமாண்டு ஆங்கிலத்துறை மாணவி சான்ட்ரா விடுதலை உணர்வை இன்றைய இளைஞர்களிடத்தில் ஏற்படுத்தி தமிழில் உரையாற்றினார். சுதந்திர தின விழாவினையொட்டி பல்வேறு துறை சார்பாக நடைபெற்ற போட்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நாட்டுப்பற்றுடன் விழா இனிதே நிறைவடைந்தது.