தருவைக்குளத்தில் காவல் துறை சார்பாக போதைப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
போதை பழக்கத்திற்கு எதிராக, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ.கா.ப உத்தரவுப்படியும், விளாத்திகுளம் காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளரின் அறிவுரையின்படியும், தருவைக்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இருதயராஜ் தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி தருவைக்குளத்தில் நடைபெற்றது.

பேரணியில் தருவைகுளம் அரசுப் பள்ளியில் பயிலும் சுமார் 250 மாணவ, மாணவிகளுடன், பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்றோ ரூபன், உதவி தலைமை ஆசிரியர் சுமதி, பட்டதாரி ஆசிரியர் பாலசுப்பிரமணியன், செல்வ பிரதாப், பிரதீபா, மகேஸ்வரி, ஐடாஶ்ரீ, உடற்கல்வி ஆசிரியர் அந்தோனி ரவிக்காந்த், தருவைகுளம் காவல் நிலையத்தின் தலைமை காவலர், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.












