+1 பொதுத் தேர்வு ரத்து : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி

+1 பொதுத் தேர்வு ரத்து :
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி

மாநில கல்விக் கொள்கையின்படி நடப்பு கல்வி ஆண்டின் முதலே தமிழ்நாட்டில் +1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்திற்கான மாநில அரசின் கல்விக் கொள்கை அறிக்கையை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இன்று வெளியிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர். அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது,

புதிய கல்விக் கொள்கை முறையில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை தொடரும். இனி 10,12 ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொது தேர்வு நடத்தப்படும் என்றும் நடப்பு கல்வியாண்டு முதலே 11ஆம் வகுப்பு வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் 11 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் தங்களை பொதுத்தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் ஆண்டாக 11ஆம் வகுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

வீடியோ நன்றி நியூஸ் 18