நலம் பெற்று பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியானது : உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 136 மாணவ, மாணவியர்களின் பாராட்டு விழாவில் முதல்வர். ஸ்டாலின் உருக்கம்

நலம் பெற்று பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மன மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியானது : உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 136 மாணவ, மாணவியர்களின் பாராட்டு விழாவில் முதல்வர். ஸ்டாலின் உருக்கம்

நலம் பெற்று பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியானது என முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 136 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கிய பின், தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்து இருப்பதாவது,

நலம் பெற்று பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியானது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று இன்று புகழ்பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 136 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும் பாராட்டு சான்றிதழும் வழங்கினேன். மிகவும் பின்தங்கிய, துன்பங்களை அனுபவித்த குடும்பங்களில் இருந்து மேல் எழுந்து புகழ் பெற்றிருக்கும் அவர்களது கல்வி பயணத்தையும், கல்வி மீதான அவர்களது பற்றையும் கேட்டு உள்ளம் நெகிழ்ந்து கண்கள் கலங்கினேன்.

கல்விதான் உண்மையான பெருமையை தேடித் தரும் என உயர் படிப்புகளுக்கு சென்றுள்ள இவர்கள் வாழ்வின் அத்தனை உயரங்களையும் காண வேண்டும் என உள்ளன்போடு வாழ்த்துகிறேன்.

இப்படி கல்வியால், உழைப்பால் முன்னேறி சாதனை படைப்பவர்களை தான் தமிழ் சமூகம் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.