தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பில்
“கல்வியில் செயற்கை நுண்ணறிவு கருவிகள்” நிகழ்ச்சி
தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியின் இயற்பியல் துறை (சுயநிதிப் பிரிவு) கல்லூரி முதல்வர் வழிகாட்டுதலோடு “AI tools in academics” இன்னும் நிகழ்வை நடத்தியது. இதில் சிறப்பு விருந்தினராக உஸ்பெகிஸ்தான், தாஷ்கெண்ட் அமிதி பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்பத்துறை உதவிப் பேராசிரியர் டாக்டர்.காயத்ரி தேவி கலந்துகொண்டார்.
இந்நிகழ்வுக்கு சுயநிதிப்பிரிவு இயக்குநர் முனைவர்.லாரன்ஸ் தலைமை வகித்தார்.
“அறிவியல் கல்வியில் செயற்கை நுண்ணறிவு கருவிகள்” என்ற தலைப்பில் உரையாடல் நடைபெற்றது. மாணவர்கள் கலந்துகொண்டு, திறமையான கேள்விகள் மற்றும் கருத்துகள் மூலம் நிகழ்வை சிறப்பித்தனர்.
முதலாமாண்டு இளநிலை செயற்கை நுண்ணறிவு மெஷின் லெர்னிங் படிக்கும் மாணவர்கள் சுமார் 48 பேர் இதில் பங்கேற்றனர்.
டாக்டர்.காயத்ரி தேவி, நேரம் மிச்சப்படுத்தும் முக்கியமான AI கருவிகள் மற்றும் தொழில்நுட்பம் வேகமாக மாறும் சூழ்நிலை பற்றி மாணவர்களுக்கு மிக முக்கியமான தகவல்களை வழங்கினார்.












