தமிழ்நாட்டில் 10, 11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான பள்ளி பொதுத் தேர்வு கால அட்டவணைகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என்றும் முதல்வர் மு. க. ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார். இன்னும் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று தெரிவித்தார்.












