தூய மரியன்னை கல்லூரியில் நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் :
மூத்த வழக்கறிஞர் பாலசேகர் சிறப்புரை
தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் நுகர்வோர் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் (22.07.2025) நடைபெற்றது.
இதில், மூத்த மற்றும் காமராஜர் கல்லூரியின் பகுதி நேர வழக்கறிஞர் பாலசேகர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நாம் அன்றாடம் உண்ணும் அனைத்தும் உண்ண தகுதியுள்ள பொருட்களாய் இருக்கின்றனவா என்பதை ஆராய்ந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கூறினார். மேலும், நாம் வாங்கும் பொருட்கள் ஒவ்வொன்றும் கொடுக்கும் பணத்திற்க்கு ஏற்ற அளவு தரமானதாக இருக்கின்றனவா என்பதை சரிபார்த்து வாங்கவேண்டும் என்றும் கூறினார்.

கொள்முதல் செய்யும் பொருட்கள் தகுதியற்றவைகளாக இருக்கும் பட்சத்தில், அவற்றை தகுதியுள்ள பொருட்களாக மாற்ற நாமே நேரடியாக நூகர்வோர் நீதிமன்றத்தை தொடர்பு கொண்டு வழக்குகளை பதிவு செய்து தரமான பொருட்களை வாதாடி பெற்றுக்கொள்ளலாம் என்பதை மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.
போலி விளம்பரங்களை கண்டு நாம் ஏமாற்றம் அடைய வேண்டாமென்றும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி (தன்னாட்சி), செயலர். முனைவர். அருட்சகோதரி. குழந்தை தெரஸ், கல்லூரி முதல்வர். முனைவர். அருட்சகோதரி. ஜெஸி பர்னாண்டோ, துணை முதல்வர். முனைவர். அருட்சகோதரி, எழிலரசி மற்றும் சுயநிதி பிரிவின் இயக்குனர். முனைவர். அருட்சகோதரி. ஆரோக்கிய ஜெனீசியஸ் அல்போன்ஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நுகர்வோர் மன்ற பொறுப்பாளர்கள் முனைவர். ரதி மற்றும் முனைவர். மரிய சகாய சர்மிளா ஆகியோரும் சிறப்புற செய்திருந்தனர். இக்கூட்டத்தில் நுகர்வோர் மன்ற மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் கேள்விகளுக்கு விளக்கம் பெற்று பயனடைந்தனர்.












