தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்

தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது.

பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் கொண்டாடப்பட்டது.


விழாவிற்கு கலந்து கொண்ட அனைவரையும் பள்ளியின் தாளாளர் ஜெயாசண்முகம் வரவேற்று காமராஜரின் பொதுத் தொண்டு பற்றியும், காமராஜர் வழியில் எளிமை, தூய்மை, பணிவுடைமை, தலைமையுடைமை, துணிவுடைமை ஆகியவற்றோடு மாணவ, மாணவியர்கள் தங்களை வாழ்வில் உயர்த்திக் கொள்ள உறுதி கொள்ள வேண்டும் என்று கூறினார்.
காமராஜரின் வேடமணிந்து மாணவர் சந்துரு பேசினார். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் ஆகியோர் காமராஜரின் உருவ படத்திற்கு பூக்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியைகள் செய்திருந்தனர்.