வகுப்பில் அனைவருக்கும் ஒரே வரிசை : இனி கடைசி பெஞ்ச் கிடையாது

வகுப்பில் அனைவருக்கும் ஒரே வரிசை :  இனி கடைசி பெஞ்ச் கிடையாது

பள்ளிகளில் வகுப்புகளில் மாணவர்கள் அமரும் பெஞ்சுகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக போடப்பட்டு அதில் மாணவர்கள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக அமர்ந்திருப்பது வழக்கம்.

இனி இந்த நிலையின் அமைப்பை மாற்றி அமைக்க பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். குறிப்பாக தற்போதைய வகுப்பறை அமைப்பின் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதை மாணவர்களால் சரிவர கவனிக்க முடியாத சூழல் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.எனவே கற்பித்தவில் கவனச் சிதறலை தவிர்ப்பதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வகுப்பறை இருக்கைகள் “ப” வடிவில் அமைக்க பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

அனைத்து வகை பள்ளிகளிலும் வாய்ப்புள்ள வகுப்பு அறைகளை “ப” வடிவில் மாற்றி அமைக்க வேண்டும் என்றும்,இதன் மூலம் கற்றலில் மாணவர்களின் ஆர்வம் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.