நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரிய 16 மாணவர்களின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரிய 16 மாணவர்களின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் 4 ம் தேதி நடைபெற்றது.

அதற்கான விண்ணப்ப பதிவுகள் கடந்த பிப்பிரவரி மாதம் 7 ம் தேதி முதல் மார்ச் 7ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.

இந்நிலையில் கடந்த மே மாத 4 ம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது.அதில் மொத்தம் 22,09,318 பேர் தேர்வு எழுதினர்.

அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக்கூறி ஆவடி ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 2 மாணவர்களும், கே.கே.நகர் பத்ம சேஷாத்திரி பள்ளியை சேர்ந்த 1 மாணவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுக்களில் கடந்த மே 4 ம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்து மறு தேர்வு நடத்த உத்தரிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என நீதிபதிகள் தெரிவித்ததுடன் நீட் மறுதேர்வு நடத்த உத்தரவு கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும் தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்கள் மொத்தம் 11,350 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது…

ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த முறை நடந்த மனு மீதான விசாரணையில் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தேர்வு முழுமையாக எழுத முடியவில்லை என மாணவர்கள் தரப்பிலும், மாணவர்கள் பெரும்பான கேள்விக்கு பதில் அளித்துள்ளதால் மறுதேர்வு நடத்த முடியாது என தேசிய தேர்வு முகமை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி 16 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீட் தேர்வு 2025 முடிவுகள் வெளியிட தடையை நீக்கியது. மேலும் கடந்த மாதம் ( ஜீன் ) 14 ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளி வந்தது குறிப்பிடத்தக்கது.