எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இந்த ஆண்டில் 72,943 பேர் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இந்த ஆண்டில் 72,943 பேர் விண்ணப்பம்

எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புக்கு இந்த ஆண்டில் 72,943 பேர் விண்ணப்பம் பதிவு செய்துள்ளதாக மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் 5200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.அதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.

இவை தவிர சுயநிதி கல்லூரிகளில் 3450 இடங்களும், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரியில் 9200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில் 496 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % ஒதுக்கீட்டில் வழங்கப்படுகிறது.

பிடிஎஸ் இடங்களை பொருத்தவரை அரசு மருத்துவக் கல்லூரியில் 250 இடங்களும், தனியார் கல்லூரியில் 1900 இடங்களும் உள்ளன. அதில் 126 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்படுகின்றன.

அதன்படி 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

அதற்கான இணைய வழி விண்ணப்ப பதிவு கடந்த 6 ம் தேதி தொடங்கி விண்ணப்பங்களை பதிவு செய்ய கடந்த 29ஆம் தேதிவரை அவகாசம் அளிக்கப்பட்டது. விண்ணப்பங்கள் www.tnmedicalselection.org என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்ய அறிவித்திருந்தது.

 

அந்த வகையில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 30,000 க்கு மேற்பட்டவரும், அரசு ஒதுக்கீட்டுக்கு 42000- க்கும் மேற்பட்டவர் விண்ணப்பித்தனர்.

மொத்தம், 72943:பேர் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனரக அதிகாரி தெரிவித்தனர்.
விண்ணப்பதாரர்களின் நீட் மதிப்பெண்ணை மத்திய அரசிடம் இருந்து பெற்று, அதன் அடிப்படையில் கணினி முறையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்றும் அதைத் தொடர்ந்து கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்படட்டுள்ளது.