தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல் நிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்
தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளியும்,தேசிய பசுமை படையும் இணைந்து சுற்றுச்சூழல் தினத்தை பெற்றோருடன் கொண்டாடும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வை பள்ளித் தாளாளரின் அனுமதியுடன் தலைமையாசிரியர் ( பொறுப்பு ) ராஜகுமார் சாமுவேல் மற்றும் ஆசிரியை சுகவதி பள்ளிக்கு வந்த 5 பெற்றோரையும் அவர்களுடைய மாணவர்களையும் அழைத்து காலை 10 மணிக்கு பள்ளி வளாகத்தில் 5 மரக்கன்றுகளை நட வைத்தார்கள்.
அதற்கான சான்றிதழையும் அவர்களுக்கு வழங்கினார்கள்.












