கல்லூரிக் கனவு இன்று நனவாகிறது











:
12 ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 3 ம் தேதி ஆரம்பித்து 25 ம் தேதி வரை நடைபெற்றது.
அதன் பின்பு மே 8 ம் தேதி தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை ஜூன் 2 ந் தேதி முதல் நடைபெறும் என உயர் கல்வித் துறை அறிவித்திருந்தது.
இது தொடர்பாக உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு மே 7 ந் தேதி தொடங்கி மே 27 ந் தேதி) வரை நடைபெற்றது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்தனர். மாநிலம் முழுவதும் இதுவரை 2,25,705 விண்ணப்பங்கள் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,08,619 மாணவிகளும், 76,065 மாணவர்கள் மற்றும் 78 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1,84,762 பேர் கட்டணம் செலுத்தி உள்ளனர்.
சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் மே 29 ந் தேதி அன்று அந்தந்த கல்லூரிகளில் வெளியிடப்பட்டது.
பொதுப் பிரிவினருக்கான தரவரிசைப் பட்டியல் மே 30 ந் தேதி அந்தந்த கல்லூரிகளில் வெளியிடப்பட்டது மேலும் கல்லூரித் தகவல் பலகைகளில் தரவரிசைப் பட்டியல்கள் ஒட்டப்பட்டு, கல்லூரி இணைய தளங்களிலும் வெளியிடப்பட்டது.
மேலும், 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு மற்றும் பொது கலந்தாய்விற்கான தகவல்கள், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பம் செய்த மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த கல்லூரிகளிலிருந்து தெரிவிக்கப்பட்டது..
மே 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் மற்றும் பிளஸ் டூ துணைத் தேர்வு எழுதும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் மீண்டும் 30.5.2025 அன்று முதல் இணையதளம் மூலமாக விண்ணப்பப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கலந்தாய்வு :
சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 2 மற்றும் 3 ந் தேதிகளிலும்,ஜூன் 4-ந் தேதி முதல் ஜூன் 14 ந் தேதி வரை பொதுக் கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
வகுப்புகள் துவக்கம் :
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 30 ந் தேதி வகுப்புகள் தொடங்கும்.
இவ்வாறு உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி தேர்வு எழுதுவதற்கு ஏதாவது ஒரு பட்டம் பெற்றால் போதும் என்பதால் மாணவர்கள் அதிகமாக கலை அறிவியல் பாடப் பிரிவுகளில் சேர விரும்புவதாக சென்னை மாநிலக் கல்லூரி முதல்வர் ராமன் தெரிவித்துள்ளார்.
புதிய கல்லூரிகள் :
தமிழ்நாடு முழுவதும் இந்த வருடம் கூடுதலாக 11 புதிய அரசுக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்து மொத்தம் 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 1 லட்சத்து 25 ஆயிரம் இடங்கள் உள்ளன. இருந்தபோதிலும் சென்னை மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் சேர்வதற்கு மட்டும் சுமார் ஒரு லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
முதல் 5 அரசு கல்லூரிகள் :
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மாணவர்களின் விருப்ப கல்லூரிகளில் முதல் 5 இடத்தை பிடித்த அரசு கல்லூரியாக சென்னை மாநிலக் கல்லூரி, கோயம்புத்தூர் அரசுக் கலைக் கல்லூரி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி, வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரி மற்றும் திருச்சிராப்பள்ளி பெரியார் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன. இந்த 5 கல்லூரிகளுக்கும் அதிக அளவிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருப்பதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
விண்ணப்ப பதிவு & கட்டணம் :
கல்லூரி கல்வி இயக்குநரகம் வழங்கிய தரவுகளின்படி இந்த ஆண்டு 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,26,465 இடங்கள் உள்ளன. இதுவரை, தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் சேர்க்கை இணையதளம் மூலம் முதல்கட்ட விண்ணப்ப பதிவில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 712 விண்ணப்ப பதிவுகளும் அதில் 1 லட்சத்து 87 ஆயிரத்து 310 பேர் கட்டணத்தொகையும் செலுத்தியுள்ளனர்.
அதிக டிமாண்ட் பாடப் பிரிவுகள் :
பிஎஸ்சி வேதியியல், ஆங்கிலம் பொருளாதாரம், வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் உள்ளிட்ட பிஏ படிப்புகளுக்கும் அதிக விண்ணப்பங்கள் வந்துள்ளன. பிஏ தமிழ் படிப்பில் சேரவும் அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
மேலும் குடிமைப் பணிகளுக்கு செல்வதற்கு யுபிஎஸ்சி தேர்வு எழுத ஏதாவது ஒரு பட்டம் பெற்றால் போதும் என்பதால் மாணவர்கள் கலை அறிவியல் பாடப் பிரிவை அதிக அளவில் தேர்வு செய்து சேர துவங்கி உள்ளனர். அதே போல் அரசியல் அறிவியல் பாடப் பிரிவில் ஆர்வம் காட்டுகின்றனர்
வ. உ.சிதம்பரம் கல்லூரி :
குலபதி ஏ.பிசி. வீரபாகு
அவர்களால் 1951 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக வ. உ. சிதம்பரம் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இந்த கல்லூரி தென் தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் நல்லொழுக்கம் மிக்க கல்லூரி ஆகும். வ உ சி யின் பெயரால் இருப்பதால் என்னவோ இந்த கல்லூரியின் உள்ளே நுழையும் போதே நமக்கு அவரின் ஆசி கிடைத்தது போல் உணர்வு ஏற்படுகிறது.
மேலும் இக் கல்லூரி திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திடம் இணைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழுவால் ( UGC )அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வ. உ.சிதம்பரம் கல்லூரி செயலாளர் கல்வித் தந்தை ஐயா ஏ.பி.சி. வீ. சொக்கலிங்கம் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், முதல்வர் முனைவர் வீரபாகு வின் அறிவுறுத்தலின்படியும் சிறந்து விளங்குகிறது.
மேலும் வ.உ. சிதம்பரம் கல்லூரி முதல்வர் வீரபாகு வின் கல்வி கட்டமைப்பால் தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலால் ( NAAC )A++ கிரேடு பெற்றுள்ளது.
மேலும் ஒரு கிரீடம் வைத்தார் போல் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பால் ( NIRF ) 28 வது ரேங் பெற்றுள்ளது.
தூத்துக்குடி வ உ சிதம்பரம் கல்லூரியில் 2025 – 2026 ம் ஆண்டுகளுக்கான மாணவர் சேர்க்கை அரசு கல்லூரிகளுக்கு இணையாக நடைபெற்று வருகிறது.தற்போது கல்லூரியில் 99.9 சதவீத சேர்க்கை முடிவடைந்து இன்று கல்லூரி திறக்கப்பட இருக்கிறது.
வ. உ. சிதம்பரம் கல்லூரியில் இந்த முதலாம் ஆண்டில் 660 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
டிமாண்ட் :
இந்த ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.ஏ.ஆங்கிலம்,பொருளாதாரம் வணிகவியல், வரலாறு ஆகிய பாடப்பிரிவுகளுக்கு அதிக டிமாண்ட் இருந்தது.மேலும் கணிதவியல் துறையில் சேர்க்கை முடிவடைந்த நிலையில் ஒரு சில இடங்களே காலியாக உள்ளன.
புதிய பாடப் பிரிவு அறிமுகம் :
இந்த ஆண்டு வ. உ.சிதம்பரம் கல்லூரியில் புதியதாக தொடங்கப்பட்ட பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் வித் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் அண்ட் மெஷின் லேர்னிங் B. Sc computer science with Artificial intelligent and Meching Learning என்ற பாட பிரிவிற்கு அதிக டிமாண்ட் நடந்து அட்மிஷன் முடிந்து விட்டது.
கல்விச்செய்திகள் டாட் காம் வாழ்த்து :
உன் அரும்பு மீசையை முறுக்கிக் கொண்டு இன்று உன் கல்லூரி கனவை நனவாக்கிய முதலாம் ஆண்டு மாணவனே!
உன் எதிர்கால கனவை நனவாக்க 3 ஆண்டுகள் உன் மூளையின் திறனை முறுக்கேற்றி படிப்பில் கவனம் செலுத்தி உன் எதிர்கால கனவின் லட்சியத்தை அடைய “கல்விச் செய்திகள் டாட் காம்” வாழ்த்துகிறது🙏












