தூத்துக்குடியில் இரண்டு புதிய நூலகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்: தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்ப்பு
தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம்,அரசு மருத்துவமணை ஆகிய இடங்களில் புதிய நூலகங்களை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் சென்னை புத்தகப் பூங்கா, பொது நூலக இயக்ககம் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலகக் கட்டடங்கள், பரமக்குடி முழுநேர கிளை நூலகக் கட்டடம் மற்றும் 70 சிறப்பு நூலகங்களை காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஆகிய நூலகங்களில் குத்துவிளக்கேற்றி வைத்து மேயா் ஜெகன் பொியசாமி பார்வையிட்டார்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், மாநகராட்சி பகுதியில் பல நூலகங்கள்உள்ளது. இருந்தாலும் வ.உ.சி. கல்லூாி அருகில் அமைக்கப்பட்டுள்ள நூலகம் இரவு 11 மணி வரை செயல்பட்டு வருகிறது. அதில் மாவட்டத்திலுள்ள மாணவ மாணவிகள் மட்டுமின்றி அருகில் உள்ள நெல்லை, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பலரும் அந்த படிப்பகத்திற்கு வந்து அறிவுப் பூா்வமான நூல்களை படித்துப் பயன் பெறுகின்றனா்.
மதுரையில் மிகப்பொிய நூலகம் முதலமைச்சரால் உருவாக்கப்பட்டு தமிழகத்தில் எழுத்தறிவு, படிப்பறிவு இல்லாதவா்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளது.
கல்வித் துறையும், மருத்துவத் துறையும் எனக்கு இரு கண்கள் என்று முதலமைச்சர் அரசு விழாக்களில் அடிக்கடி கூறுவதுண்டு.
அதைப் பின்பற்றி இரு இடங்களில் புதிதாக கிளை நூலகங்கள் திறந்துள்ளோம். இதை அனைத்து தரப்பு மாணவ
மாணவிகளும் பயன்படுத்திக்கொண்டு எதிர்கால நலனை வளர்த்துக் கொண்டு பல சாதனைகள் புாியவேண்டும். என்ற தொலை நோக்கு பார்வையோடு அமைக்கப்பட்டுள்ளது.என்று மேயர் கூறினாா்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வர், மருத்துவர். சிவகுமார், அரசு தலைமை உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, முதல்நிலை நூலகர் ராம்சங்கர், மண்டல தலைவர் கலைச்செல்வி, மேயாின் நோ்முக உதவியாளா் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












