கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு “இளம் அக்னி சிறகுகள் விருது 2025”

  • கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு

“இளம் அக்னி சிறகுகள் விருது 2025”

போதை இல்லா தமிழ்நாடு என்பதை உருவாக்கும் நோக்கில் தமிழ் நாடு தன்னார்வலர்கள் அமைப்பும், இராணியம்மாள் கல்வி அறக்கட்டளையும் இணைந்து , “இளம் தலைமுறை எழுத்தாளர்கள் 2025” சிறுகதைப் போட்டியை மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக நடத்தியது.

மாநில அளவிலான இப் போட்டிக்கு தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 700 மாணவர்கள் சிறுகதைகள் எழுதியதில் 69 சிறுகதைகள் தேர்வாகி அதனை சிறந்த புத்தகமாகப் பதித்து 2025 ஜூன் 7ம் தேதி திருச்சி கலையரங்கில் வெளியிடப்பட்டது.

இதில் கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் 6 பேரின் சிறுகதைகள் தனித்துவம் பெற்று “இளம் அக்னி சிறகுகள் விருதினை சிறப்பு விருந்தினர் ஐ.ஐ.டி திட்ட தலைவர் ஹரி கிருஷ்ணன் கரங்களில் வழங்கப் பெற்றது மாணவியர்களின் எழுத்துப் பயணத்திற்கு உதவேகமாய் அமைந்தது.

இவ்விழாவில் மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் நேரில் கலந்து கொண்டனர்.

விருது பெற்ற மாணவர்களை கல்லூரிச் செயலர், முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டினார்கள்.