நீட் தேர்வு – 2025 முடிவு வெளியீடு, தடையை நீக்கியது சென்னை ஹைகோர்ட்: 16 மாணவர்களின் மனுக்கள் தள்ளுபடி

நீட் தேர்வு – 2025 முடிவு வெளியிட தடையை நீக்கியது சென்னை ஹைகோர்ட்:
16 மாணவர்களின் மனுக்கள் தள்ளுபடி

நீட் தேர்வு முடிவை வெளியிட  விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது.

மின்சாரம் துண்டிப்பால் நீட் மறு தேர்வு நடத்த கோரி 16 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை என மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளதால் மறுதேர்வு நடத்த முடியாது என தேசிய தேர்வு முகமைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதி, 16 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை  தள்ளுபடி செய்தார்.