நேசமணி நினைவு நாளை முன்னிட்டு இலக்கிய விழா
மார்சல் நேசமணி நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் இலக்கிய விழா அழகப்பா பல்கலைக்கழக அலுவலகம் மாடியில்
1.06.2025 ஞாயிறு காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெற்றது.
காமராஜ் நற்பணி மன்ற தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். ராஜ்குமார் ஆசிரியர்
முன்னிலை வதித்தார்க்ஷ
நாகர்கோவில் NDR பவுண்டேசன் தலைவர் அர்னால்டு அரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
குமிழ் முனை புத்தக வண்டி நிறுவனர் குமிழ் முனை சைமன் வாசிப்பு ஏன் நமக்கு அவசியமாகிறது என்ற தலைப்பில் பேசினார்.
புத்தக வாசிப்பு நற்பணி மன்ற தலைவர் எழுத்தாளர் மாரிமுத்து
வாசிப்பே தவமாக என்ற தலைப்பில் பேசினார். எழுத்தாளர். சாந்தி பிரபு
என்னை செதுக்கிய நூல்கள் என்ற தலைப்பில் பேசினார்.மற்றும் ஓய்வு பெற்ற கருவூலத்துறை அலுவலர் ஷெரிப், கண்ணன், மற்றும் ரஹமத் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தமிழ் ஆசிரியை வள்ளிநாயகி செல்வின் உட்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்
காமராஜர் நற்பணி மன்றம் அமைப்பாளர் ரவி நன்றியுரையாற்றினார்.












