கல்வித் திறனில் மிளிரும் மாணவிகளை வீட்டில் முடங்க விடாதீர்கள் : ஊர் பெரியவர்கள், பொதுநல அமைப்புகளுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வேண்டுகோள்

கல்வித் திறனில் மிளிரும் மாணவிகளை வீட்டில் முடங்க விடாதீர்கள் :
ஊர் பெரியவர்கள், பொதுநல அமைப்புகளுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வேண்டுகோள்

நான் முதல்வன் திட்ட கல்விக் கனவு 2025 உயர்கல்விக்கு வழிகோளும் நிகழ்ச்சி காயல்பட்டணம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் கலந்து கொண்டார்,

2 மணி நேரத்திற்குமேல் உரையாற்றிய ஆட்சியர் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மிகவும் உபயோகமான, அறிவுப்பூர்வ எதிர்கால வழிகாட்டும் வழித்தடமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் மாணவர்களின் சரித்திரத்தை கையில் வைத்திருக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர், நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மாணாக்களின் விபரத்தை திரையிட்டு காட்டினார்.

அவர்களில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளின் மதிப்பெண்களுக்கு ஏற்ப அவர்களின் கல்லூரிகளை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று அந்தந்த மாணவர்களுக்கு நேரடியாகவும், வராத மாணவர்களுக்கு அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கும் வேண்டுகோள் வைத்தார்.

நல்ல மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவியின் வீட்டில் இதற்கு மேல் படிக்க வேண்டாம் என்று தடுத்திருந்த செய்தி கேட்டு மன வேதனை அடைந்த ஆடசியர்
கூட்டம் முடிந்த பின் வஜீஹா கல்லூரி நிர்வாகிகளுடன் நடந்தத ஆலோசனைக் கூட்டத்தில்

சில நல்ல மாணவிகளை மேற்கொண்டு படிக்க வேண்டாம் என்று அந்த குடும்பங்கள் நிறுத்தி வைத்திருப்பதாக கேள்விப்பட்டேன்!

இந்த நூற்றாண்டில் கல்வி அறிவின் தாக்கமும், வீரியமும் விரிந்து பறந்து கிடக்கும் இந்த விழிப்புணர்வு யுகத்தில்,

கல்வி அறிவின் முக்கியத்துவம் தெரியாமல் கல்வித்திறனில் மிளிரும் மாணவிகளை வீட்டிலேயே முடங்கிகிடங்கள் என்ற அந்த நிலையிலிருந்து மீட்டெடுக்கும் கடமையில் ஊர் பெரியவர்களும், படித்துணர்ந்த மேதாவிகளும், கல்வியின் முக்கியத்துவம் அறிந்த பொதுநல அமைப்புகளும் சேர்ந்துதான் அந்தப் பெற்றோர்களுக்கு அறிவுரை செய்திடல் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.