2025 – 2026 ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை:
சதம் ( 100 ) அடித்தது தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவின்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2025 -26 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதன்படி தூத்துக்குடி ஜின் பேக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக
இப்பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை இன்று 100 – ஐ எட்டி உள்ளது.
இதற்கு அரசு பள்ளிகளில் இலவசமாக வழங்கப்படும் பாடப் புத்தகம், நோட்டு புத்தகம், சீருடை, காலணி, பேருந்து பயண அட்டை, புத்தகப் பை, கணித உபகரணம், வண்ண பென்சில் மற்றும் புவியியல் வரைபடம் போன்ற இலவச சேவைகள், நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு உதவித்தொகைகள் குறித்த விழிப்புணர்வு மட்டுமின்றி
ஜின் பேக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியின் பல்வேறு சாதனைகளும் காரணமாகும்.
ஆங்கில வழிக்கல்வி
அரசுப் பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பதற்கு ஆங்கில வழிக்கல்வியும் முத்தாய்ப்பான காரணமாகும்.
100 வது மாணவர் சேர்க்கை
இன்று ஜின் பாக்டரி அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற மாணவர் சேர்க்கையில் தூத்துக்குடி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அன்றோ ரூபன் முன்னிலையில் பள்ளியின் 100 வது புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
தலைமை ஆசிரியரின் திறன்:
மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வில் ( NMMS ) தனது பள்ளியில் 9 மாணவர்களை தகுதி பெற வைத்து தூத்துக்குடி மாவட்ட அரசு பள்ளி அளவில் ஜின் பாக்டரி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை முதலிடம் பிடிக்க வைத்தபள்ளியின் தலைமை ஆசிரியர் பிரகாஷ் மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற முக்கிய காரணமாவார்.
இது குறித்து தலைமை ஆசிரியர் கூறுகையில் கடந்த ஆண்டு பள்ளியின் மாணவர்கள் எண்ணிக்கை 675 ஆக இருந்தது இது கடந்த 26 நாட்களில் 100 புதிய மாணவர் சேர்க்கையுன் 775 ஆக உயர்ந்துள்ளது. இது மேலும் உயர்ந்து புதிய மாணவர் சேர்க்கை 200 ஐ தாண்டி சாதனை படைக்கும் என்றார்.
மேலும் அரசு பள்ளியில் கடந்த ஆண்டை விட புதிதாக 50 மாணவர்களை சேர்க்கும் பள்ளிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்த நிலையில் தூத்துக்குடி ஜின் பாக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இதுவரை புதிய மாணவர் சேர்க்கை 100 ஐ எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.












