அதிகமாக 50 மாணவர்களை சேர்க்கும் அரசு பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
கடந்த ஆண்டை விட இந்த கல்வி ஆண்டில் அரசு பள்ளியில் 50 மாணவர்களை அதிகமாக சேர்க்கும் அரசு பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அந்த சுற்றறிக்கையில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முழுமையாக இருக்க வேண்டும் என்றும் இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் மேலும் பெற்றோர்களை சந்தித்து மாணவர்களை சேர்க்கும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது












