தமிழ்நாட்டில் ஓட்டப்பிடாரம், மானாமதுரை உட்பட 11 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் ஓட்டப்பிடாரம், மானாமதுரை உட்பட 11 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்: தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின்

கிராமப்புற மாணவர்களில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு உயர்கல்வி சேவையை பூர்த்தி செய்யும் விதமாக குறிப்பாக மாணவிகளுக்கு உயர்கல்வியில் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கித் தருவதற்காக உயர் கல்வித்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம்- ஓட்டப்பிடாரம், சிவகங்கை மாவட்டம் – மானாமதுரை, கடலூர் மாவட்டம்- பண்ருட்டி,நீலகிரி மாவட்டம் – குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் – நத்தம், சென்னை மாவட்டம் – ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் – விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் – செய்யூர், திருவாரூர் மாவட்டம் – முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் – திருவிடைமருதூர், மற்றும் பெரம்பலூர் மாவட்டம் – கொளக்காநத்தம் ஆகிய 11 இடங்களில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இன்று சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் இந்த புதிய 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த கல்லூரிகள் தலா ஐந்து பாடப்பிரிவுகளுடன் தற்காலிக கட்டிடங்களில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த ஆண்டில் கூடுதலாக கிராமப்புறத்தில் பின்தங்கிய 3,050 மாணவ, மாணவிகள் பயனடைவார்கள்.