தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் நாடார் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி விருதுகள் மற்றும் சீறுடை வழங்கும் விழா
தருவைக்குளம் நாடார் மக்கள் இயக்கம் சார்பில் கல்வி விருதுகள் மற்றும் சீறுடை வழங்கும் விழா தருவைக் குளம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
ஊர் நிர்வாகிகள் மகாராஜர மற்றும் அனிட்டன் ஆகியோர் தலைமையில், அசோகன் லாரன்ஸ் பாரத் பிரான்சிஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் சாமுவேல் கலந்து கொண்டு அரசு பள்ளியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
முன்னதாக பங்கு தந்தை வின்சென்ட் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.















