இன்று மே 14, பெரியம்மை தடுப்பூசி வெளியிட்ட தினம்
1796-ல் எட்வர்ட் ஜென்னர் பெரியம்மை நோய்க்கான முதல் தடுப்பூசியை வெளியிட்டார்.
கப்பல் பயணம் இந்திய தொழிலாளர்கள்:
1879-ல் 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதல் தொகுதி லியோனிடாஸ் கப்பலில் பிஜியை அடைந்தது.
சுவீடனில் ஆர்ப்பாட்டம் 5 பேர் பலி:
1931-ல் சுவீடனில் தொழிற்சங்க உறுப்பினர்களின் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க காவற்துறையினர் சுட்டதில் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
வார்சா உடன்பாடு:
1955-ல் பனிப்போர் காலத்தில் சோவியத் ஒன்றியம் உட்பட எட்டு கம்யூனிச நாடுகள் வார்சா உடன்பாடு என்ற தற்காப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
விமான விபத்து:
2004-ல் பிரேசில், மனௌசில் ஒரு விமானம் அமேசான் மழைக்காடுகளில் விபத்துக்குள்ளாகி, அதில் பயணம் செய்த 33 பேரும் உயிரிழந்தனர்.












