முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசின் கல்வி கட்டணம்

                                                     முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசின் கல்வி கட்டணம்

அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக் கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள், சட்டக் கல்லூரிகளில் சாதிப் பாகுபாடு, வருமான பாகுப்பாடின்றி கல்வி கட்டண செலவை அரசு வழங்குகிறது

போட்டோ நன்றி நியூஸ் 18

முதல் தலைமுறை பட்டதாரிகள்

பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியில் சேரும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்வி கட்டணம் வழங்கப்படுகிறது. அரசு கல்லூரிகள் மட்டும் இல்லாமல், அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களும் இந்த கல்வி கட்டண சலுகையை பெற்றுகொள்ளலாம்.

தகுதி

இந்த சலுகையை பெற நீங்கள் உங்கள் வீட்டின் முதல் பட்டதாரியாக இருக்க வேண்டும். அதாவது, உங்கள் பெற்றோர், சகோதரர்கள் யாரும் இதுவரை கல்லூரிக்கு சென்று பட்டப்படிப்பை பெற்றிருக்கக்கூடாது. அப்படி என்றால், நீங்கள் இந்த கல்வி உதவித்தொகைக்கு தகுதியானவர்கள் ஆவீர்கள்.

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை

முதல் தலைமுறை பட்டதாரி கல்வி உதவித்தொகை பெற அதற்கான சான்றிதழ் பெறுவது கட்டாயமாகும். 12-ம் வகுப்பை முடித்தவர்கள் இந்த சான்றிதழ் பெற தகுதியானவர்கள். குடும்பத்தில் முதல் ஆளாக பட்டப்படிப்பில் சேரும் மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள அரசின் இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் விண்ணப்பம்

https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

தேவையான ஆவணங்கள்

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழை பெற ஒரு புகைப்படம், வீட்டு முகவரி சான்று, ஆதார் அட்டை, பள்ளி மாற்று சான்று (டிசி), 10 மற்றும் 12-வது மதிப்பெண் சான்றிதழ், வீட்டில் வேறு யாரெனும் படித்திருந்தால் அவர்களுடைய மாற்றுச் சான்றிதழ் ஆகியவை தேவை.

கல்லூரிகளில் சேரும் முதல் தலைமுறை பட்டதாரிகள் இந்த சான்றிதழை பெற்று கலந்தாய்வின் மூலம் கல்லூரிகளில் கல்வி கட்டண சலுகையை பெறலாம்.