+2 முடித்த மாணவர்களுக்கு

 

பண்ணிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து தேர்வு முடிவுகள் அடுத்த வாரத்தில் வெளிவர இருக்கிறது.

மாணவர்கள் அடுத்து படிக்க இருக்கும் மேற்படிப்பை தேர்ந்து எடுக்கும் ஆர்வத்தில் இருப்பார்கள். பிளஸ் 2 முடித்த பின் பல படிப்புகள் உள்ளன, அவற்றில் சில முக்கியமான படிப்புகளான பொறியியல், மருத்துவம், வணிகவியல், சட்டப்படிப்பு, கணினி அறிவியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகள் உள்ளன. இதில் மாணவர்கள் உங்கள் ஆர்வம், திறமை மற்றும் இலக்குக்கு ஏற்ப ஒரு படிப்பை தேர்வு செய்யலாம்.

போட்டோ நன்றி ABP Nadu

பிளஸ் 2க்கு பிறகு படிக்கக்கூடிய சில படிப்புகளின் விபரங்கள்

பொறியியல் (Engineering):

பி.இ, பி.டெக் போன்ற படிப்புகள். இயந்திரப் பொறியியல், மின் பொறியியல், கணினி அறிவியல் பொறியியல் போன்ற பல பிரிவுகள் உள்ளன.

மருத்துவம் (Medicine):

எம்.பி.பி.எஸ் (MBBS), பி.டி (B.D.S) போன்ற படிப்புகள். மருத்துவத் துறை, பல் மருத்துவம், போன்ற பல பிரிவுகள் உள்ளன.

வணிகவியல் (Business Administration):

பி.பி.ஏ (BBA), பி.காம் (B.Com), எம்.பி.ஏ (MBA) போன்ற படிப்புகள். கணக்கியல், நிதி, சந்தைப்படுத்தல், மனிதவள மேலாண்மை, போன்ற பல பிரிவுகள் உள்ளன.

சட்டப்படிப்பு (Law):

எல்.எல்.பி (LLB) போன்ற படிப்புகள். குற்றவியல், சொத்துச் சட்டம், நிறுவனச் சட்டம், போன்ற பல பிரிவுகள் உள்ளன.

போட்டோ நன்றி ETV Bharath

கணினி அறிவியல் (Computer Science):

பி.சி.ஏ (BCA), பி.எஸ்.சி.ஐடி (BSc IT) போன்ற படிப்புகள். நிரலாக்கம், வலைத்தள வடிவமைப்பு, தரவுத்தள மேலாண்மை, செயற்கை நுண்ணறிவு, போன்ற பல பிரிவுகள் உள்ளன.

கலை மற்றும் அறிவியல்:

பி.ஏ (BA), பி.எஸ்.சி (BSc) போன்ற படிப்புகள். வரலாறு, மொழி, இலக்கியம், தத்துவம், உளவியல், சமூகவியல், போன்ற பல பிரிவுகள் உள்ளன.

பிற படிப்புகள்:

பி.எஸ்.சி. உளவியல், சமூகப் பணி, கலை, இசை, நடனம், விமானி பயிற்சி போன்ற பல படிப்புகளும் உள்ளன.
இதில் மாணவர்கள் நீங்கள் உங்கள் ஆர்வம், திறமை மற்றும் தொழில் இலக்குக்கு ஏற்ப ஒரு படிப்பை தேர்வு செய்யவும்.