கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பள்ளிக் குழந்தைகளை காக்க பள்ளிக் கல்வித்துறை ஐடியா
போட்டோ நன்றி இந்து தமிழ்
கோடை வெயில் சதம் அடித்துக் கொண்டிருக்கிறது.
கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 2ஆம் தேதி திங்கள் அன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி ஆசிரியர்களுக்கு வரும் ஏப்ரல் 30ஆம் தேதி கடைசி வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மே கடைசி வாரத்தில் பள்ளிகள் திறப்பிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்படும். இதற்கு இடைப்பட்ட கோடை விடுமுறை நாட்களை எப்படி கழிக்க வேண்டும், என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும், பெற்றோர்கள், மாணவர்களுக்கு அறிவுரைகள் என பள்ளிக் கல்வித்துறை சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
மாணவ, மாணவிகள் கவனத்திற்கு
மாணவ மாணவிகள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்பது நீர்நிலைகளில் குளிக்க செல்லும் போது மிகவும் கவனம் தேவை. பெற்றோர் உடன் இருக்க வேண்டும். பாதுகாப்பான இடங்களில் மட்டும் குளிக்கலாம்.
போட்டோநன்றிசமயம் தமிழ்
டிவி, செல்போன்களை தவிர்க்கவும்
விடுமுறை நாட்களை பயனுள்ள வகையில் கழிக்க இசை நிகழ்ச்சிகளை கவனிக்கலாம். தனிமையை தவிர்க்க வேண்டும். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் உறவினர்களுடன் பாசத்தை பகிர்ந்து பொழுதை கழிக்கலாம். டிவி, செல்போன் ஆகியவற்றில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். உணவு விஷயத்தில் பெற்றோர்கள் கூடுதல் செலுத்துவது அவசியம்.
அனைவரும் தண்ணீர் பாட்டில்களை ( பிளாஸ்டிக் தவிர்க்கவும் ) எடுத்துச் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் குழந்தைகள் நாள் முழுவதும் தவறாமல் தண்ணீர் குடிக்க ஊக்குவிக்கவும். குழந்தைகள் உற்சாகமாக விரும்பி தண்ணீர் குடிக்க நீங்கள் தண்ணீர் உள்ளே பழத்துண்டுகள்அல்லது எலுமிச்சைத் துளிகளைச் சேர்க்கலாம்.
கோடை ஆடைகளைப் பொறுத்தவரை, பருத்தி தான் சிறந்தது. பருத்தி துணி காற்றை சுதந்திரமாகச் சுற்ற அனுமதிக்கிறது, வெப்பமான நாட்களிலும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் குளிர்ச்சியாகவும் வசதியாகவும் வைத்திருக்கும.
குழந்தையை புத்துணர்ச்சியுடனும், குளுமையுடனும் வைத்திருக்கும் இலகுரக பருத்தி டி-சர்ட்கள், கால் சட்டைகள் மற்றும் பைஜாமாக்களை வாங்கிக் கொடுங்கள்.
இயற்கை குளிர் பானங்களான இளநீர், மோர், கரும்பு சாறு, கேப்பை கூழ் மற்றும் கம்மங் கூழ் கொடுத்து குடிக்க பழக்குங்கள். பாட்டில் பானங்களை தவிர்க்கவும்.
பழங்கள்
நீர்ச் சத்து நிறைந்த நுங்கு, தர்பூசணி, திராட்சை சாப்பிட பழக்குங்கள்.
பலாப்பழம் வெயிலுக்கு சிறந்தது. அதில் உள்ள நார்ச் சத்து செரிமானத்திற்கு நல்லது. பலாப்பழம் குடலை வழுப்படுத்துகிறது. இரத்தத்தில் உள்ள உப்பின் அளவை கட்டுப்படுத்தி உடலை குளிர்ச்சியாக வைக்கிறது.


வெளியில் வெளியே செல்லும்
போது குடை, தொப்பி மற்றும் சன் கிளாஸ் அணிந்து செல்லவும்.
உங்கள் குழந்தைகளை தினமும் இருமுறை பல்துளக்கி, குளிக்க நடைமுறை படுத்துங்ககள்.
மேற்கண்ட செயலை குழந்தைகளுக்கு தினமும் நடைமுறை படுத்தி குழந்தைகளை கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து கட்டுப்படுத்தலாம் என்று பள்ளிக் கல்வித் துறை பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.












