கல்வித் தகவல்கள்
உலகின் முதல் பள்ளிக்கூடம்
உலகின் முதல் பள்ளிக்கூடம் மெசபொட்டோமியாவில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் மதப் பள்ளிக்கல்வி தோன்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த பள்ளியில் களிமண் பலகையில் ஏற்கெனவே எழுதப்பட்டிருந்த பாடத்தைப் படித்து, பிறகு புதிய பலகையில் எழுத மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். ..!
சாவித்ரிபாய் புலே,
இந்திய வரலாற்றில் பெண்கல்விக்காக முதல் பள்ளி அமைத்தவர், சாதியத்தை தீயிட்டுக் கொளுத்திய, பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்த சமூகப் போராளியும் கூட. அரசியல் கவிதை எழுதிய புரடசிப் பெண்ணும் ஆவார்.. மராட்டிய மண்ணின் முதல் பெண் கவிஞரும் இவரே. 19ம் நூற்றான்டின் அனைத்து சமூகத்தடைகளையும் உடைத்து தூக்கி எறிந்தவர்.
டெல்லி, பல்கலைக்கழக நிறுவனத்தின், உலகளாவிய ஆய்வுகள் பற்றி ( Global Studies at University Institute in New Delhi,India.) ஆராய்ந்து பணிபுரியும் .பேரா. டாம் உல்ப் (Tom Ulf) என்பவர் , ஆயிகோஸ் என்ற உலக பத்திரிகையில் ( published in ‘Oikos Worldviews Journal’ (2008), சாவித்திரிபாய் பற்றி உயர்வாக குறிப்பிட்டுள்ளார். அவர் செக்கோஸ்லோவாகியா நாட்டின் ஜான் கொமேனியஸ் (Jan Comenius (1592-1670), என்பவர் ஐரோப்பாவின், நவீன கல்வியின் தந்தை என்றும்,. சாவித்திரிபாய் இந்தியாவின் நவீன கல்வி மற்றும் பெண் கல்வியின் அன்னை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இருவரையும் உலக அளவில் கல்விக்காக ஒப்பிட்டு எழுதி இருக்கிறார் என்றால், சாவித்திரி என்ற பெண்மை கல்விக்கு அளித்துள்ள சாதனையை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.












