கோவை கற்பகம் மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கற்பகம் மருத்துவக் கல்லூரி அதன் ஏழாவது பட்டமளிப்பு விழாவை அண்மையில் நடத்தியது. இந்த விழாவுக்கு கற்பகம் கல்விக் குழுமத்தின் தலைவர் வசந்தகுமார் தலைமை வகித்தார். கற்பகம் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சந்திரசேகரன் விழாவை வழிநடத்தினார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற டாக்டர் டிகம்பர் பெஹேரா, இந்திய தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியின் தலைவர், விழாவின் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி, பட்டம் பெறுபவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.
மொத்தமாக 138 மாணவர்கள் எம்பிபிஎஸ் பட்டமும், 10 மாணவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்பில் பட்டமும் பெற்றனர். பல்கலைக்கழகத் தேர்வுகளில் உயர் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தங்க, வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வழங்கப்பட்டன.

விழாவில் கற்பகம் கல்விக் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் முருகையா, துணை முதல்வர் டாக்டர் நிர்மலா, குடியிருப்பு மருத்துவ அலுவலர் டாக்டர் அருண், மருத்துவ இயக்குநர் டாக்டர்
வெங்கடேசன், மருத்துவ பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த ரத்தின செளந்தர்யா என்ற மாணவி 4 பதக்கங்களை பெற்றுள்ளார். அவர் தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தியின் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.