கோவில்பட்டி கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 28வது ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினராக கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்
கணினி அறிவியல் துறை (1999-2002 Batch) முன்னாள் மாணவர் மற்றும் லைவ் ஸ்பேஸ் நிறுவனத்தின் சென்னை கிளையின் இணை இயக்குநருமான அணு குருவில்லா சாமுவேல், அவர்கள் கலந்து கொண்டு விளையாட்டு விழா பேரூரை ஆற்றி, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். மாணவ பருவத்தில் தன்னம்பிக்கையின் இன்றியமையாமையைக் குறித்தும், தன்னம்பிக்கையே வெற்றியின் அடித்தளம் எனவும் கூறினார். மேலும், வாழ்க்கைக்கு குறிக்கோள் மிக அவசியம் மற்றும், குறிக்கோளை எட்ட வேண்டும் என்ற எண்ணம் வேண்டும், தோல்விகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்றும், தோல்விகள் கற்றுக் கொடுக்கும் பாடங்களை வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
மாணவர் மாதேஷ் மற்றும் மாணவி அஸ்வினி தனி நபர் சாம்பியனாக தேர்வு பெற்றார்கள். மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மாணவர் பிரிவில் பச்சை நிற அணியும் மற்றும் மாணவியர் பிரிவில் சிவப்பு நிற அணியும் பெற்றது.
உடற்கல்வி இயக்குநர் விளையாட்டு துறை ஆண்டறிக்கை வாசித்தார்.. மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் துறை மாணவி ப்ரீத்தி நன்றியுரை ஆற்றினார்.. இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாகத்தினர், கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர், நேசனல் பொறியியற் கல்லூரியின் இயக்குநர்; முதல்வர், லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை, உடற்கல்வி இயக்குநர் தலைமையில் பேராசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்












