தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் எம்பவர் இந்தியா சார்பில் உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி ‌!

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் எம்பவர் இந்தியா சார்பில் உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி ‌!

தூத்துக்குடி எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் மற்றும் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டம் ஆகியவற்றின் சார்பில் உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியின் டீன் முனைவர்.சண்முகம் துவக்கி வைத்து விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டார். முதல் பிரதியை எம்பவர் இந்தியா செயல் இயக்குநர் சங்கர் பெற்றுக் கொண்டார்.

எம்பவர் இந்தியா செயல் இயக்குநர் ஆ.சங்கர் தலைமை தாங்கி பேசும் போது கூறியதாவது:
கடந்த 22 ஆண்டுகளாக எம்பவர் இந்தியா சார்பில் உணவில் அயோடின் உப்பு பயன்படுத்துவதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தி வருகிறோம். இந்தியாவில் உப்பு உற்பத்தியில் முதலாவதாக குஜராத்தும், அதற்கு அடுத்தபடியாக தமிழகமும் விளங்குகிறது. மேலும் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் உப்பு உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது.

அயோடின் என்பது நம் உடலில் தைராய்டு ஹார்மோன்கள் உருவாக மிக அவசியமான ஒரு நுண்ணூட்ட சத்தாகும். இது அனைவருக்கும் அவசியம். அயோடின் சத்து குறைந்தால் மூளை வளர்ச்சி குறைவு, நினைவாற்றல் மங்குதல், முன் கழுத்துக் கழலை மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு அடிக்கடி கருச்சிதைவு என பல்வேறு நோய்கள் ஏற்படும். உடலுக்கு மிகவும் தேவையான அடிப்படை ஊட்டச்சத்தாக விளங்கும் சோடியம் எனப்படும் உப்பு சற்று அதிகரித்தாலும் இதய நோய், பக்கவாதம், ஆயுள் காலம் குறைவது போன்ற பிரச்சனைகள் நேரிடுவதாக எச்சரித்துள்ளது. மேலும் உணவு பாதுகாப்புத் துறையின் வழிகாட்டுதல்படி சர்க்கரை, உப்பு, எண்ணெய் வகைகளை உணவில் குறைப்போம்! அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துவோம்! நலமுடன் வாழ்வோம்! என சங்கர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து உலக அயோடின் பற்றாக்குறை குறைபாடுகள் தடுப்பு தின விழிப்புணர்வு மற்றும் அயோடின் குறித்து உறுதி மொழிஏற்கப்பட்டது.

முன்னதாக மேலாளர் மீன்வளக்‌ அவசியம்
கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.சண்முகம் அனைவரையும் வரவேற்றார். எம்பவர் இந்தியா லலிதாம்பிகை நன்றி கூறினார்.நிகழ்ச்சியில் கல்லூரியின் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.