தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது!

தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது!

தூத்துக்குடி, ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையானது ஒவ்வொரு ஆண்டும் மாணவியர்க்கெனப் பாடத்திட்டத்தோடு, கல்விப்புலத்தின் அறிவினைப் புதுப்பித்துக்கொள்ளுவதற்கும், மெருகூட்டிக் கொள்ளுவதற்கும் பல கருத்தரங்குகளையும், பல பயிற்சிப் பட்டறைகளையும், இலக்கிய அமர்வுகளையும் நடத்தி வருகின்றது.

அந்தவகையில்,சான்லாக்ஸ் பன்னாட்டு ஆய்விதழோடு இணைந்து 12.10.2026 இன்று, தமிழ் இலக்கியத்தில் மகளிர் மாண்புகள் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கினை நடத்தியது. இறைவாழ்த்தோடும் தமிழ்த்தாய் வாழ்த்தோடும் இக்கருத்தரங்கு தொடங்கப்பட்டது.

தமிழ்த்துறைத்தலைவர் மல்லிகா வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர்.பழனி வாழ்த்துரை நல்கினார்.

முதல் அமர்வில்,தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர்.முனைவர்.இந்து. “தமிழிலக்கியத்தில் மாண்புமிகு மகளிர்” என்ற தலைப்பில் சங்க கால பெண்களின், குழந்தை வளர்ப்பு, போரின் பங்களிப்பு, வேளாண்மை கண்டுப்பிடிப்பு, விவசாய உற்பத்தி, பண்டமாற்று வணிகம், எனப் பல்துறை ஆளூமைகளை, இன்றைய பெண்களின் நிலைகளோடு ஒப்பிட்டு உரை நிகழ்த்தினார்.

 

பிற்பகல் அமர்வில், தென் கொரிய, சேஜோங் பல்கலைக்கழகப்பேராசிரியர்,முனைவர். ஆரோக்கியராஜ் இணைய வழியில் தமிழிலக்கியத்தில் மகளிர் மாண்புகள் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்.

கருத்தரங்கில் பங்குப்பெற்று, தங்கள் கட்டுரைகளை நல்கிய ஆய்வாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கபட்டன. நிறைவாகப் பேராசிரியர் .விஜயா கலைவாணி நன்றி கூறினார்.