தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் VOCC ஊடக மன்றம் தொடக்கம் !
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் கல்லூரியின் 75 வது ஆண்டு பவள விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, VOCC ஊடக மன்றம் 06.10.2026 நேற்று பிற்பகல் 1.00 மணிக்கு ALM அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி கல்லூரியின் மதிப்பிற்குரிய செயலர் திரு. ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம் மற்றும் முதல்வர் முனைவர் .வீரபாகு ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.
VOCC ஊடக மன்றம், மாணவர்களின் புகைப்படக் கலை, காணொளிப் பதிவு, இதழியல், டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கம், திரைப்பட உருவாக்கம் மற்றும் படைப்பாற்றல் மிக்க தகவல் தொடர்பு ஆகிய திறன்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“Capture • Create • Inspire” – “பதிவு செய் • படை • ஊக்கமளி” என்ற குறிக்கோளுடன் செயல்படும் இம்மன்றம், கல்லூரியில் நடைபெறும் நிகழ்வுகளை ஆவணப்படுத்தவும், நவீன ஊடகங்களின் வாயிலாக அர்த்தமுள்ள செய்திகளையும் கதைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கவும் மாணவர்களை ஊக்குவிக்கிறது.
இம்மன்றத்தைத் தொடங்குவதற்கும், அதன் எதிர்கால செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கும் சிறப்பான முன்முயற்சி எடுத்துள்ள ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ஜாக்சன் மற்றும் குழு உறுப்பினர்களான பேராசிரியர் கோமதி நாயகம், முனைவர்.சந்திரா, முனைவர். இர்வின் விக்டோரியா, முனைவர். சுதன் மற்றும் பேராசிரியர் பொன். கனகா ஆகியோருக்கும் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு தெரிவித்தார்.












